த பினான்ஸ்‌ பிஎல்சி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து!

2011ஆம்‌ ஆண்டின்‌ 42ஆம்‌ இலக்க நிதித்தொழில்‌ சட்டத்தின்‌ கீழ்‌ அனுமதிப்பத்திரம் (Licence) வழங்கப்பட்ட நிதிக்கம்பனியொன்றான த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியானது 2008இல்‌ செலிங்கோ குழுமத்தினுள்‌ காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல்‌ நிறுவனங்களின்‌ தோல்வியினால்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டது.

அப்போதிலிருந்து கம்பெனியின்‌ நிதியியல்‌ நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது.
வேறுபட்ட உபாயதிட்டங்களுடாக கம்பெனியினை மீளமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும்‌ வெற்றியளிக்கவில்லை.
மேலும்‌ கம்பனியின்‌ தற்போதைய நிலையின்‌ தொடர்ச்சி அதன்‌ வைப்பாளர்களையும்‌ ஏனைய ஆர்வலர்களையும்‌ பாதிக்கும்‌. மேலும்‌ கடந்த 15 மாதங்களாக வைப்பாளர்கள்‌ வைப்புச்‌ செய்த பணத்தை மீளப்பெற முடியாதநிலை காணப்பட்டது.
வைப்பாளர்களினதும்‌ ஏனைய ஆர்வலர்களினதும்‌ நலனை கருத்தில்‌ கொண்டு கடந்த 2019 ஒக்டோபர்‌ 23ஆம்‌ திகதி வெளியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டில்‌ குறிப்பிட்டவாறு நிதித்தொழில்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்ட அதிகாரங்களின்‌ அடிப்படையில்‌ இலங்கை மத்திய வங்கியின்‌ நாணயச்சபை 2019 ஒக்டோபர்‌ 23ஆம்‌ திகதியிலிருந்து அமுலுக்கு வரும்‌ வகையில்‌ கம்பனிக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்துச்‌ செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்தது.
நிதித்தொழில்‌ சட்டத்தில்‌ குறிப்பிட்டவாறு அனுமதிப்பத்திரத்தை இரத்துச்‌ செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்து 3௦ நாட்களுக்குள்‌ த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சி எவ்வித ஆட்சேபனையும்‌ வெளிப்படுத்தவில்லை.
அதன் அடிப்படையில் அனுமதிப்பதிரத்தை இரத்துச் செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்து ௨ நாட்கள்‌ முடிவடையும்‌ நிலையில்‌ த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியினது அனுமதிப்பத்திரம் இரத்துச்‌ செய்யப்படலாம்‌.
அதாவது 2019 திசேம்பர்‌ 21ஆம்‌ திகதிக்கு பின்னர்‌ இரத்துச்‌ செய்யப்படலாம்‌. இருப்பினும்‌ த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியின்‌ வேண்டுகோளுக்கு இணங்க நாணயச்சபை புதிய நம்பகமான முதலீட்டாளர்‌ ஒருவரை மூலதன உள்ளீட்டிற்கான ஆதாரத்துடன்‌ சேர்த்து வியாபார மீளமைத்தல்‌ திட்டத்தினையும்‌ சமர்ப்பிப்பதற்கு மீண்டுமொரு வாய்ப்பளித்தது.
இருப்பினும்‌ த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சி இதுவரையில்‌ எவ்விததிட்டத்தையும்‌ சமர்ப்பிக்கவில்லை.
இலங்கை மத்திய வங்கியின்‌ நாணயச்சபையானது நிதித்தொழில்‌ சட்டத்தின்‌ கீழ்‌ நிதித்தொழிலினை கொண்டு நடாத்துவதற்கு த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியிற்கு வழங்கியிருந்த அனுமதிப்பத்திரம் நிதித்‌ தொழில்‌ சட்டத்தின்‌ கீழ்‌ 2020 மே 22ஆம்‌ திகதியிலிருந்து நடைமுறையில்‌ வரும்‌ வகையில்‌ இரத்துச்‌ செய்வதற்கு தீர்மானித்தது.
இதன்படி த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியானது நிதித்தொழில்‌ செய்வதற்கான அனுமதி அதே திகதியிலிருந்து நடைமுறையில்‌ வரும்‌ வகையில்‌ இரத்துச்‌ செய்யப்படுகின்றது.
மேலும்‌ இலங்கை மத்திய வங்கியின்‌ வங்கியல்லா நிதியியல்‌ நிறுவனங்களின் மேற்பார்வைத்திணைக்களத்தின்‌ பணிப்பாளர்‌, நிதி குத்தகைக்குவிடல்‌ சட்டத்தின்‌ கீழ்‌ நிதி குத்தகைக்குவிடல்‌ நிறுவனமொன்றாக பதிவுசெய்யப்பட்ட த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியின்‌ பதிவுச்சான்றிதழ்‌ 2020 மே 22ஆம்‌ திகதியிலிருந்து நடைமுறையில்‌ வரும்‌ வகையில்‌ இரத்துச்‌ செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியானது புதிதாக குத்தகைகள்‌ வழங்கும்‌ அனுமதி அதே திகதியிலிருந்து நடைமுறையில்‌ வரும்‌ வகையில்‌ இரத்துச்‌ செய்யப்படுகின்றது.
இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும்‌ நிதி நெருக்கடி ஆதரவுத்‌ திட்டமானது த பினான்ஸ்‌ கம்பனி பிஎல்சியில்‌ காப்புறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும்‌ இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும்‌ நிதி நெருக்கடி உதவித்திட்டத்தின்‌ ஒழுங்குவிதிகளின்படி உயர்ந்தபட்சம்‌ ரூ.600,00 வரையான தொகையினை இழப்பீடாகச்‌ செலுத்துவதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌.
இதன்படி மொத்தவைப்பாளர்களில்‌ 93% வைப்பாளர்கள்‌ வைப்பிலிட்ட முழுத்தொகையை (145,172 மொத்தவைப்பாளர்களுள்‌ 35,500 வைப்பாளர்கள்‌) பெறக்கூடியதாக இருக்கும்‌. எஞ்சிய 17% ஆன வைப்பாளர்கள்‌ (10,072 வைப்பாளர்கள்‌) ரூ. 500.000 வரை பெற்றுக்கொள்ள முடியும்‌.மேலும்‌, வைப்பாளர்கள்‌ எஞ்சியுள்ள தமது வைப்புக்களின்‌ ஒரு பகுதியை நிதிக்கம்பனி முடிவுறுத்தப்படும்‌ போது கோரல்களின்‌ முன்னுரிமை தொடர்பான ஒழுங்கு விதிகளுக்குட்பட்டு ஒடுக்கிவிடும் செயன்முறையினூடாகவும் அறவிட்டுக் கொள்ள முடியும்.
மேலும்‌, வைப்பாளர்கள்‌ எஞ்சியுள்ள தமது வைப்புக்களின்‌ ஒரு பகுதியை நிதிக்கம்பனி முடிவுறுத்தப்படும்‌ போது கோரல்களின்‌ முன்னுரிமை தொடர்பான ஒழுங்கு விதிகளுக்குட்பட்டு ஒடுக்கிவிடும் செயன்முறையினூடாகவும் அறவிட்டுக் கொள்ள முடியும்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.