மேலும் 272 பேர் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் ஆஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 272 பேர், இன்று காலை மெல்பேர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று காலை 6.12 மணிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 605 எனும் விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களும் அவர்களின் பயணப் பொதிகளும் இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.
அத்தோடு, அவர்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகளினாலும், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளினாலும் சோதனை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




