வேறு சட்டத்தரணிகளை நாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!!

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்ததை அடுத்து வேறு சட்டத்தரணிகளை நாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என அறிய முடிகின்றது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஏற்கனவே நீதிமன்றத்தில் அவரை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு வழக்கறிஞரை நியமித்திருந்தார். இருப்பினும், மற்ற இரண்டு உறுப்பினர்களைப் பற்றி முடிவு இறுதி செய்யப்படவில்லை.
நீதிமன்றத்தில் வழக்குகளில் ஒரு சுயாதீன ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்த சட்டமா அதிபரை நியமிக்க வேண்டும் என்ற முடிவை தான் எதிர்ப்பதாக பேராசிரியர் ஹூல் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் திகதியை சவால் செய்யும் மனுக்கள் கடந்த திங்கட்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டுமே சட்டமா அதிபர் முன்னிலையாவார் என உயர் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த 7 மனுக்களை எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டத்தரணி சரித குணரத்ன, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர் விக்டர் இவான், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 07 தரப்புக்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.