மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பம்!!
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்புக்கு வரும் பேருந்துகள் கொழும்புக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- கண்டி வீதியினூடாக வரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நிட்டம்புவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
- மார்க்க இலக்க 5 இன் ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலாக பேருந்துகள் மினுவாங்கொடை வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
- காலி வீதியினூடாக வருகைதரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் பாணந்துறை வரை மாத்திரமே சேவையில் ஈடுபடும்.
- அவ்வாறே அவிசாவளையினூடாக கொழும்புக்கு பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படும்.
- அதேபோல அநுராதபுரம் புத்தளம் மற்றும் குளியாப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்பட வேண்டும்.
- அவ்வாறே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக வரும் பேருந்துகள் கொட்டாவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
- இந்த பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமானது குறித்த பேருந்து நிறுத்தப்படும் இடம் வரை மாத்திரமே அறவிடப்பட வேண்டும்.
- இந்த பேருந்துகளின் முன்பக்கத்தில், குறித்த பேருந்து நிறுத்தப்படும் இறுதி இடம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- அவ்வாறே சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய, அனைத்து பயணிகளும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் உரிய பொது சுகாதார விதிகளை பின்பற்றுமாறு போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
அதன்பின்னர், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, ரயில் சேவைகள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




