வவுனியா அரச அதிபரைச் சந்தித்தார் வன்னிக்கான புதிய கட்டளை தளபதி!!

வன்னிக்கான புதிய இராணுவத்தளபதியாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிங்க வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேவை சந்தித்துள்ளர்.

இந்த சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
எனினும் இச் சந்திப்பு குறித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராலோ அல்லது வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்கள அலுவலரோ உரிய முறையில் வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை.
இதையடுத்து சில ஊடகவியலாளர்கள் இச்சந்திப்பு செய்திகளை சேகரிப்பதை புறக்கணிப்பு செய்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு கடந்த காலங்களிலும் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்து.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தகவல் திணைக்கள அலுவலர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் இன்றைய செயற்பாடும் இவ்வாறே இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இவ்வாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் செயற்படும் மாவட்ட செயலக தகவல் திணைக்கள அலுவலர் ஆகியோரின் செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமலிருப்பதற்கு அரசாங்க அதிபர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.