வவுனியாவில் வாள் வெட்டு சம்பவம்!!

வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற இருவேறு கத்திகுத்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளனர்.
அத்தோடு அலகல்லு பகுதியில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.