வியட்நாம் இயல்பு நிலைக்கு திருப்பம்


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாமில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலை தளர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வியட்நாமில், இதுவரை 288 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள், கடைகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.