நினைவேந்தலிற்கு சென்ற விக்னேஸ்வரன் அணியை சுற்றிவளைத்த பொலிசார்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் அதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நோக்கி பயணித்த க.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர், சங்குப்பிட்டியில் ஒரு மணித்தியாலம் காக்க வைக்கப்பட்ட பின்னர் திருப்பியனுப்பப்பட்டனர்.
யாழ். நோக்கி செல்லும் போது அவர்கள் செம்மணிப் பகுதியில் அஞ்சலி செலுத்துவதற்காக வாகனததை நிறுத்தியபோது , பொலிஸ் அணியொன்று அவர்களை முற்றுகையிட்டது.
அத்துடன் விக்கினேஸ்வரன் குழுவினர் அஞ்சலி செலுத்த முடியாது என பொலிசார் தடையேற்படுத்தினர்.
இதன் காரணமாக விக்னேஸ்வரனுக்கும், பொலிஸ் அதிகாரிகளிற்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.
இந்த தர்க்கத்தில் பொலிசாரின் கவனம் திரும்பியிருந்த நிலையில், ஏற்கனவே நாட்டப்பட்டிருந்த அஞ்சலி கம்பத்தில் க.அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள் தீபமேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.