உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்: உலக வங்கி!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகநாடுகள் கடுமையான முடக்கநிலையை அறிவித்துள்ளன. இதனால் பெரும்பாலான நாடுகள் வருவாய் இல்லாமல் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், ‘உலக வங்கி மூலம் தற்போது, 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். கொரோனாவால் உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள், தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்.
இதனால், அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் நாடுகளில் அடுத்த, 15 மாதங்களுக்கு, 16,000 கோடி அமெரிக்க டொலர்கள் (160 பில்லியன்) செலவிடத் திட்டமிட்டுள்ளோம். அரசுகளும் அமைப்புகளும் பகைமையை மறந்து, வறுமை ஒழிப்பில் தீவிரமாக செயற்பட வேண்டிய காலம் இது’ என கூறினார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.