விவசாயியாக மாறிய பிரபல ஹீரோ!

தமிழ் திரை உலகில் ’மதயானைகூட்டம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் ’கிருமி’ ’விக்ரம் வேதா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் கதிருக்கு கோலிவுட் திரையுலகில் திருப்புமுனையை கொடுத்த படம் ’பரியேறும் பெருமாள். இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து மிகப் பெரிய வெற்றிப் படமாக உருவானது. இதன் பின்னர் தளபதி விஜய்யுடன் பிகில் என்ற படத்தில் நடித்த கதிர், சமீபத்தில் வெளியான ‘ஜடா’ என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது கொரோனா விடுமுறையில் நடிகர் கதிர் தனது சொந்த கிராமத்தில் உள்ளார் என்றும் கிராமத்தில் அவருடைய ஒருநாள் பொழுதுபோக்கு என்ன என்பதையும் சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் கதிர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் முழுமையாக விவசாயியாக மாறி உள்ள ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

அந்த புகைப்படத்தில் அவர் மண்வெட்டியால் மண்ணை எடுத்துச் செல்வது போன்ற ஒரு காட்சி உள்ளது. கிராமத்தில் விவசாயிகள் சாதாரணமாக செய்யும் வேலையைத்தான் நகரத்தில் உடற்பயிற்சி என்ற பெயரில் ஜிம்மில் செய்கிறார்கள் என்று நடிகர் கதிர் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இதனைய்டுத்து முழுக்க முழுக்க விவசாயி ஆக மாறிய கதிர், அடுத்ததாக ஒரு முழு நீள கிராமிய படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.