பிரான்ஸில் சுற்றுலா தளங்கள் மீண்டும் திறப்பு!!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் காரணமாக முடப்பட்டிருந்த லூவர் அருங்காட்கியகம் மற்றும் சுற்றுலா தளங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதன்படி, இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள லூவர் அருங்காட்சியகம் எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
லூவர் அருங்காட்சியகத்துக்கான முன்பதிவுகள் ஜூன் 15ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், பல்வேறு நிபந்தனைகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கரோசெல் சதுக்கம் இன்று 30ஆம் திகதி திறக்கப்பட உள்ளமையும், டூலரீஸ் அரண்மனை நாளை 31ஆம் திகதியும் திறக்கப்பட உள்ளது.

.jpeg
)




