தாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா!!

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் என 700க்கும் மேற்பட்டவர்களும், சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்படுத்தபட்டுள்ளதால் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் திருமணம் உள்ளிட்ட ஒரு சில விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து சேலத்தில் இன்று ஒரு திருமணம் நடந்தது. இன்று திருமணம் நடந்த மணப்பெண் ஒருவருக்கு தாலி கட்டிய சில நிமிடங்களில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டதாகவும், பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து இன்று திருமணமான பெண், தாலி கட்டிய ஒரு சில நிமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். தாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மணமகன் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.