சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!!
கொரனோ வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நபர் கழிவறைக்கு செல்வதாக கூறியதாகவும், நீண்ட நேரம் அவர் கழிவறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது துண்டால் தூக்கிலிட்டு தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை வளாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ஏற்கனவே கொரோனா வைரசால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)