யாழ் மாவட்டத்தில் காற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு!!

யாழ் மாவட்டத்தில் காற்றின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது உள்ள நிலமைகள் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த 21ஆம் திகதியில் இருந்து யாழ் மாவட்டத்தில் வீசிய கடும் காற்றுடன் கூடிய காலநிலையால் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் ஒரு வீடு முழுமையாகவும் மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கின்றன. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து பெண் ஒருவர் காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

மேலும் சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது. 6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள். அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து கடற்தொழிலாளி ஒருவரின் படகு சேதமடைந்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில், வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பியுள்துடன் தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.