அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த வர்தகர்களுக்கு நேர்ந்த நிலை
கொவிட் 19 காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி ஜே.எம்.ஆர்.கருணாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 65 வர்த்தகர்களுக்கு எதிராகவும் ஏப்ரல் மாதம் 72 வர்த்தகர்களுக்கு எதிராகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
குறிப்பாக உணவுப் பொருட்கள் விவசாயத்திற்கு தேவையான பொருட்களே அதிக தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதன்காரணமாக பல பொருட்கள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நுவரெலியா, தலவாக்கலை, பூண்டுலோயா, கொத்மலை, ராகலை, கந்தப்பளை, ரிகில்லகஸ்கட, வட்டவளை, கொட்டகலை, பத்தனை, பொகவந்தலாவ, உடபுஸ்ஸல்லாவ ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு விஜயம் செய்தனர்.
இதன்போதே அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்ற வர்த்தகர்கள் தொடர்பில் 052 -2223933 மற்றும் 052 3539812 அல்லது 071-0110054 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.

.jpeg
)