பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பொன்மகள் வந்தாள்'!!

வரும் வெள்ளியன்று ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு தமிழ் படம் வெளியாக உள்ளதால் இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்


மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ’வா செல்லம்’, ‘வான் தூறல்கள்’, ‘கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ‘பூக்களின் போர்க்களம்’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. ’96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர்

ஜெஜெ பெடரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜோதிகா உள்பட முக்கிய கேரக்டர்கள் அனைவருமே வழக்கறிஞர் கேரக்டரில் நடித்துள்ளார்கள் என்பதால் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்ற காட்சிகளாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஜோதிகாவின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.