பெருநாளில் ஓட்டமாவடி சகோதரர்களின் மனிதநேயம்!!
Dr.எஸ்.ஏ.பரீட் (பொது வைத்திய நிபுணர்) அவர்களின் வழிகாட்டலுக்கமைாக கொரோனா சிகிச்சை நிலையமான வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 9 முஸ்லிம் சகோதரர்கள் உட்பட ஏனைய மாற்றின சகோதர்களுக்கும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பெருநாள் அன்பளிப்பாக நிவாரணப்பொதிகள் வழங்கி வைத்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.
கொரோனா காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் நோன்புப்பெருநாளை வீடுகளுக்குள் கொண்டாடுமாறும் முடிந்தளவு தான தர்மங்களை அயலவர்கள், தேவையுடையோருக்கு வழங்குமாறும் பிரதேச சமூக, சமய அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
இதனை அடிப்படையாகக் கொண்டு, Dr.எஸ்.ஏ.பரீட் (பொது வைத்திய நிபுணர்) அவர்களின் வழிகாட்டலில் ஓட்டமாவடியைச்சேர்ந்த இளம் தெழிலதிபர்களான எஸ்.எச்.எம் நஜீத், ஐ.எம்.றிகாஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் வெலிகந்தை வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று உரிய பயனாளிகளிடம் அன்பளிப்புப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
நாட்டின் இன்றைய சூழலைக் கருத்திற்கொண்டு இன, மதம் பாராது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஓரங்கமாக இம்மனிதநேயப்பணியை மேற்கொண்ட சகோதரர்களுக்கு பலரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)