சிம்பு, கவுதம் மேனனின் புதிய வீடியோ வைரல்!!
சிம்பு, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் ஒரு சிலர் இந்த குறும்படத்தை கேலியும் கிண்டலும் செய்து மீம்ஸ்களை வெளியிட்டனர் என்பதும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சிம்பு, த்ரிஷா, கவுதம் மேனன் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே இந்த குறும்படம் எடுக்கப்பட்டு உள்ளது. சிம்பு நடிக்க வேண்டிய காட்சி குறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கவுதம் மேனன் விளக்குகிறார். அதனை பார்த்து காட்சியை புரிந்து கொண்ட சிம்பு நீங்கள் சொல்லியபடியே நடிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
இதேபோல்தான் த்ரிஷாவுக்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இயக்குனர் கவுதம்மேனன் காட்சியை விளக்கி உள்ளார் என்றும் ஒரே ஒரு கேமராமேன் மட்டும் இருவரது இல்லங்களுக்கு சென்று இந்த குறும்படம் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த குறும்படம் ’விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்தை எதிர்பார்க்க வைத்து விட்டதால் விரைவில் ’விடிவி 2’ படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo