சின்னத்திரை படப்பிடிப்பு தொடர்பில் தமிழக அரசு அதிரடி முடிவு!!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன என்பதும் சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் ஆகியோர்களிடம் திரை உலகினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நிபந்தனைக்கு உட்பட்டு படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து ஏற்கனவே தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் எங்களது கோரிக்கையை ஏற்று சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க தமிழக முதலமைச்சர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி என சின்னத்திரை சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தொலைக்காட்சிகளில் மீண்டும் சின்னத்திரை தொடர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.