நாட்டில் பழிவாங்கும் படலம் தீவிரமடைந்துள்ளது -ரிசாட் பதியுதீன்!!
புதிய புதிய குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரித்த வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியுற்றதன் பின்னர் இந்த சதி நாடகத்தை அவர்கள் தொடங்கி, படிப்படியாக அதிகரித்து தேர்தல் நெருங்க நெருங்க தீவிரப்படுத்தி வருகின்றனர்.
திரும்பும் பக்கம் எல்லாம் அம்புகள் நிறைந்தும், சதிவலைகள் பின்னப்பட்டும் கிடக்கின்றன. எனினும், அவற்றுக்குப் பயந்து எமது பயணத்தை நாம் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என அவர்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் இப்போது நவீன வடிவிலான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி எம்மை துரத்தி துரத்தி அடிக்கின்றனர் நாம் எழுந்து கொள்ளமாட்டோம் என நினைக்கின்றனர்.
இந்தத் தேர்தலில் நீங்கள் தருகின்ற மக்கள் ஆணையே எமக்கு முதற்பலமாக அமையும். மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் கடந்தகாலங்களில் மனச்சாட்சியுடன் பணியாற்றியிருக்கின்றது. ” என தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo