பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று!!
இந்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றவுள்ளனர்.
இதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லலை.
அத்தோடு, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo