திரையரங்கில் ஒன்றாக கோட்டா, மஹிந்த!
த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் திரையரங்கம் சென்றிருந்தனர்.
கொழும்பு One Galleface – PVR திரையரங்கில் நேற்று (28) பிற்பகல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் ஆவர்.
ஜூலை 02ஆம் திகதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் “த நியுஸ் பேப்பர்” திரைப்படம் திரையிடப்படுவதுடன், அன்று காலை 10.30 முதல் காட்சியை இலவசமாக பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சுகாதார ஊழியர் குழுவினர், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி ஒருமுறை இத்திரைப்படத்தை இலவசமாக பார்வையிட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் திரைப்படத்தின் விசேட காட்சியை பார்வையிட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)