நீதிகோரும் போராட்டங்கள் அமைதியான போராட்டங்களாக மாறியுள்ளன!
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி கடந்த வாரம் நடைபெற்ற ஆக்ரோஷ போராட்டங்களின்போது நிலவிய பதற்றம் தற்போது தணிந்துள்ளது.
தற்போது அந்த போராட்டங்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வொஷிங்டன், நியூயோர்க், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் மக்கள் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்தினர்.
இந்த போராட்டங்களின் போது கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுப்பதற்காக போராட்டக்காரர்கள் முகக் கவசங்களை அணிந்திருந்தனர். மேலும், அடிப்படை மாற்றங்களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுவரை போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
46 வயதான ஜோர்ஜ் ஃப்ளாய்ட், மே 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண தலைநகர் மினியாபொலிஸில், பொலிஸ் அதிகாரி சாவின் பிடியில் எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு கழுத்து நெறிபட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




