தலைமை அதிகாரி இராணுவ அலுவலகத்திற்கு திடீர் நியமனம்!!

இலங்கை இராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இராணுவத்தின் 55 ஆவது அலுவலக தலைமை அதிகாரியாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இதேவேளை, இராணுவத்தின் பதில் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ இன்று பொறுப்பேற்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இதுவரை கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதியாக ரசிக பெர்னாண்டோ கடமையாற்றினார்.
மேலும் , கொஸ்கம சீதாவக்க பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் 42 ஆவது படை நிறைவேற்றதிகாரியாக மேஜர் ஜெனரல் டீ.எஸ் பன்சஜய கடமைகளை பொறுப்பேற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.