வெடிபொருள் நிரப்பிய பொம்மையை வீசிச் சென்ற இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம், வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
அந்தப் பொம்மையை ஆராய்ந்த போது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து, பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை சி.சி.ரி.வி. கமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர். நேற்றுக் காலை நீர்வேலி பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரை கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்புகளால் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேக நபரை இன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.