கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!!
கேரள மாநிலம், மலப்புரம் கிராமத்துக்கு அருகில் கர்ப்பிணி காட்டு யானை ஒன்றிற்கு அன்னாசிப்பழத்தில் சிலர் வெடிவைத்து குடுத்ததில் அதனை உண்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது.
விசமிகள் கொடுத்த அன்னாசியை உண்ட யானை மிகுந்த வலியுடன் அந்த கிராமத்தைச் சுற்றி வந்தபோதும் யானை, அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்கவில்லை.
இதையடுத்து வெள்ளியாற்றில் இறங்கி நின்ற யானையை வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை கும்கி யானைகளோடு மீட்க முயன்றுள்ளனர்.
ஆனால் ஆற்றை விட்டு வெளியே வராத அந்த யானை, மே 27 ஆம் தேதி இறந்துள்ளது.
இதையடுத்து மருத்துவர் முன் நடந்த பிரேதப் பரிசோதனையில் அந்த யானையின் வயிற்றில் ஒரு சிசு இருந்தது தெரிந்துள்ளது.
இந்நிலையில், யானை வெடிவைத்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் தற்போதைய தகவலின் படி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளா வனத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை யானை கொல்லப்பட்டமை தொடர்பில் கண்டணம் தெரிவித்த பலரும் அன்னாசிப்பழத்தை யானைக்கு கொடுத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




