எல்லைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து!
இந்தியா – சீனா இடையேயான எல்லைப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு சீனா உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய-சீன எல்லைப் பகுதியில் ஸ்திரத்தன்மை நிலவி வருவதாக தெரிவித்துள்ள அவர், அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான வழிமுறைகளை இரு நாடுகளும் முறையாக வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலா் நவீன் ஸ்ரீவாஸ்தவா, சீன வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை இயக்குநா் வூ ஜியாங்வோ ஆகியோா் இடையே காணொளிகாட்சி முறையில் நேற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.
இதன்போது பரஸ்பர உணா்வுகள், கவலைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பேச்சுவாா்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளுக்கு தீா்வு காண வேண்டும்’ என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் தற்போதைய சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




