இலங்கையை தொடர்ந்து சிம்பாப்வே கிரிக்கெட் போட்டியும் இரத்து


இந்தியாவில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ இரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிம்பாப்வே அணி இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தத் தொடரையும் பிசிசிஐ இரத்து செய்துள்ளது.
Powered by Blogger.