இளைஞரின் சடலம் யாழ். பாசையூர் கடலில் இருந்து கண்டெடுப்பு!!

யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (புதன்கிழமை) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து மீனவர்கள் ஒன்றுகூடி அவரைத் தேடிய போது, பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மீனவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.