மகாவலிகங்கையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

நாவலப்பிட்டிய மகாவலி கங்கையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 10 மணியளவில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டிய ஜயசுந்தர ஹோபிட்ட பகுதியைச் சேர்ந்த சஹிரு நீஷா (44) என அடையாளம் காணப்பட்டுள்ளார். .
குறித்த பெண் இன்று காலை குளிக்கச்சென்ற நிலையில், நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.