யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு!
யாழ்.மாவட்டத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள் தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுமே விதிமுறை மீறல் தொடர்பான முறைப்பாடுகளாகவே கானப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo