பிரான்ஸில் பொலிஸார் ஆர்ப்பாட்டம்!!

பிரான்ஸில் தம் வசமிருந்த கைவிலங்குகளை தரையில் எறிந்துவிட்டு பொலிஸார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் இனவாதமாகவும் மிருகத்தனமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுவதற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் பொலிஸார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸில் பொலிஸார் சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பில் இனவாதமாக செயற்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பொலிஸார் இனவாதமாக செயற்படுவதைப் போன்று பிரான்ஸிலும் பொலிஸார் நடந்துகொள்வதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் குற்றம் சுமத்தினர்.
இதேவேளை பொதுமக்களின் கழுத்தை பொலிஸார் இறுக்கிப்பிடிப்பதற்கு (சோக்ஹோல்ட்) பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்தது.
இத்தடையை பிரான்ஸின் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்ட்னர் கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், தம்வசமிருந்த கைவிலங்குகளை தரையில் வீசிவிட்டு, பேரணியாக பொலிஸார் சென்றதுடன் வாகனங்களிலும் அவர்கள் ஹோர்ன் ஒலி எழுப்பியவாறு வீதிகளில் வலம் வந்தனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.