இந்திய – சீன எல்லை மீண்டும் பதற்றம்!!
இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கடந்த 15ஆம் திகதி மோதல் இடம்பெற்ற பல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா புதிய கட்டுமானங்களை எழுப்பியுள்ளமை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது.
பதுங்குக் குழிகள் கூடாரங்கள் ராணுவ தளவாடங்கள் தளங்களுக்கான சேமிப்பு கிடங்குகள் ஆகியவை புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ளமை அந்த படங்கள் மூலம் தெரிய வருகிறது.
இந்த கட்டுமானங்கள் எவையும் சென்ற மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் இல்லை என் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை கொண்டுள்ள இந்த இரண்டு நாடுகளும் எல்லைப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்புவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தமை சமீபத்திய பதற்றத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த இருதரப்பு ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய படையினர் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது.
சீன ராணுவத்தினரும் காயமடைந்தனர் அல்லது உயிரிழப்புகளை சந்தித்தனர் என்று செய்திகள் வெளியாகி இருந்தபோது சீனா அதனை மருத்திருந்தது.
அத்துடன் வீரர்களின் மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் இந்த சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo