தமிழகத்தில் புதிய உச்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1162 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாக 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
மொத்த பாதிப்பு 23, 495 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக ஒரே நாளில் 11377 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
அத்துடன் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13, 170 ஆக அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




