வைத்தியசாலை ஒன்றின் மனிதாபிமானமற்ற செயல்!!

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஜாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவரது மகள் ரூ.5 ஆயிரத்தை முன் பணமாக செலுத்தியுள்ளார். அதன்பின்னர் சிகிச்சை சில நாட்கள் நீடித்ததால் அவரது சிகிச்சை கட்டணம் ரூ.11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தந்தையின் சிகிச்சை கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை என அவர் மகள் கூறியுள்ளார்.
மகள் கைவிரித்ததால் பணம் செலுத்தாமல் முதியவரை அழைத்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை படுக்கையோடு சேர்த்து அவரை கட்டி வைத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.
இதனை சிலர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடவே இந்த விடயம் பெரும் சர்ச்சையானது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில் ,
எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக அவருக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதால், தன்னை தானே காயப்படுத்திக்கொள்ளாமல் இருக்க கட்டப்பட்டிந்ததாகவும், மனிதாபிமான அடிப்படையில் அவரின் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்ட மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.