சீனாவுடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு!!

லடாக் கல்வான் எல்லைப் பகுதியில் சீன படையினருடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா – சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.
சீன படையினருடனான மோதலில் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் நேற்று அறிவித்திருந்தது.
இந்தநிலையில், மோதலில் படுகாயமடைந்த 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவம் பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடா்பாக இராணுவத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைத்து வந்த சூழலில் இருநாட்டு வீரா்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய இராணுவத்தின் பிகாா் படைப் பிரிவைச் சோ்ந்த கா்னல் சந்தோஷ் பாபு உட்பட இராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா். மோதல் சம்பவத்தில் முதலில் கா்னல் உட்பட 3 போ் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 17 போ் லடாக்கின் கடுமையான குளிா் சூழல் காரணமாக பின்னா் உயிரிழந்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த மோதலில் சீன தரப்பில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இரு நாட்டு இராணுவத்தினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்றும் கற்கள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவா்கள் கடுமையாகத் தாக்கிக்கொண்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இராணுவ வீரா்கள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கடந்த 1975-ஆம் ஆண்டு இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், சுமார் 5 தசாப்தங்களின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பாரிய மோதலாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மோதல் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘லடாக் எல்லையில் நிலவி வந்த இயல்பான சூழலை சீன இராணுவம் மாற்ற முயன்றதன் காரணமாகவே மோதல் ஏற்பட்டது. எல்லைப் பிரச்சினைக்கு முன்பே தீா்வு எட்டப்பட்டிருந்தால், இந்த மோதல் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். இந்தியாவின் நடவடிக்கைகள் அனைத்தும் எல்லைப் பகுதிக்குள்ளேயே நடைபெறுகின்றன’ என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மோதல் குறித்து குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான்,  ‘கடந்த 15-ஆம் திகதி இந்திய இராணுவத்தினா் சீன எல்லைக்குள் இருமுறை அத்துமீறி நுழைந்தனா். அவா்கள் சீன இராணுவத்தினரையும் தாக்கினா்.
எல்லைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் சிக்கல் ஏற்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவத்துக்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.