யாழ். மறைமாவட்ட ஆயருடன் முன்னணி சந்திப்பு!!
யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போட்டியிட்டும் நிலையில் இன்றைய தினம் மறைமாவட்ட ஆயரை சந்தித்து தேர்தல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடி, ஆயரின் ஆசி பெற்றனர்.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் குறித்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo