சுகாதார விதிமுறைகளை பேணாத பொலிஸ் உத்தியோகத்தர் – தட்டிக்கேட்ட ஊடகவியலாளர் மீது வழக்கு பதிவு!!

சுகாதார விதிமுறைகளை பேணும் முகமாக கையுறைகள் அணியாது, பொதுமக்களை சோதனை செய்தமை மற்றும் உடமைகளை தொட்டு சோதனை செய்தமை தொடர்பில் கண்டனத்தை தெரிவித்த ஊடகவியலாளருக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வடமராட்சி மாலு சந்தி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுகமும் தேர்தல் பரப்புரைக் கூட்டமும் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்களை, பொலிஸார் கையுறைகள் அணியாது வெற்றுக் கைகளால் தொட்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது கூட்டத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களையும் வெற்றுக்கைகளால் அருகில் சென்று தொட்டு சோதனை செய்ததுடன் , அவர்களது உடமைகளையும் வெற்றுக் கைகளால் சோதனை செய்தனர்.
சுகாதார விதிமுறைகளை பேணாத பொலிஸாரின் இந்த செயற்பாட்டுக்கு ஊடகவியலாளரான ம. மதிவாணன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தார்.
அதற்கு பொலிஸார் செவி சாய்க்காத நிலையில் ,அவர் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் செய்தி அறிக்கையிடும் நோக்குடன் பொலிஸ் உத்தியோகத்தரை புகைப்படம் எடுத்தார்.
அந்தவேளை , ஊடகவியலாளருடன் முரண்பட்டுக்கொண்ட பொலிஸார் ஊடகவியலாளர் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் 30ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு சமூகம் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பேணுமாறு சுகாதார அமைச்சு கடுமையாக, மக்களை அறிவுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் பொலிஸார் விதிமுறைகளை மீறி வெற்றுக்கைகளால் சோதனை நடவடிக்கைகளை முன்னேடுத்தற்கு கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.