பூட்டிய வீடு உடைத்து திருட்டு!!

யாழ்ப்பாணம் நல்லுார் சங்கிலியன் வீதியில் வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கிருந்து பெருமளவு பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றிவருகின்றார்.
இந்நிலையில், கடந்த புதனன்று அவர் மன்னாருக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை மாலை வீடு திரும்பிய நிலையில் வீடு உடைக்கப்பட்டு களவாடப்பட்டமை தெரியவந்துள்ளது.
அத்துடன் வீட்டில் இருந்ததோடு மோதிரம், பென்ரன் உள்ளிட்ட இரு பவுண் தங்க நகைகளும், கைத்தொலைபேசி என்பனவும் களவாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை மாலையில் குறித்த அதிபரால் அதிபரால் யாழ்ப்பாணம் பொலிசாரால் முறையிடப்பட்டுள்ளது.
இதனைனையடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தடையவியல் பொலிசார், அதிபரின் இல்லத்தில் தடயங்களைப் பெற்றதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.