யாழில் இரு இளைஞர்கள் பரிதாப மரணம்!!

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளின் அகால மரணங்கள் எமது தமிழ் சமூகத்துக்குப் பாரிய சோகத்தை மட்டும் அல்ல இழப்புகளையும் தருகிறது.

யாழில் மோட்டார் சைக்கிள் என்றால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு ஒரு கிரேஸி என்று தான் கூற வேண்டும்.
காதலியையும் ஒரு மோட்டார் சைக்கிளையும் நிறுத்தினால் இன்றைய யாழ் இளைஞர்கள் தெரிவு செய்வது மோட்டார் சைக்கிளை தான். காதலியை களற்றி விடுவார்கள்.
அந்தவகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் உயிர்கள் பறிபோயுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தராகப் பணியாற்றுபவரும் அவரின் நண்பருமென இவ்விருவர்களின் உயிர்கள் பிரிந்ததென்பது அவர்களின் குடும்பங்களின் சோகம் என்பதற்கப்பால் இந்த தமிழ் இனத்தின் இளம் உயிர்கள் பிரிந்ததென்பதே பெரும் துயரம்.
ஒன்று தடையே இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து செல்லும் காசே இவர்களை, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்க தூண்டுகிறது என்பது மறைக்க முடியாத உண்மை ஆகும்.
சரியான பயிற்ச்சி எடுத்துக் கொள்வது இல்லை. நண்பர்களிடம் கற்றுக் கொண்டு ஓட்டுவது. தலைக் கவசம் அணிவது இல்லை இது போன்ற விடையங்கள் இறுதியில் பெரும் சோகத்தில் கொண்டு போய் முடிக்கிறது.
இன்று ஜெய மூர்த்தி நிஷாந் மற்றும் அவரது உற்ற நண்பரான ஜானுசன் ஆகியோர் விபத்தில் சிக்கி இறந்துள்ளார்கள்.

Blogger இயக்குவது.