யாழில் கொடூர வாள்வெட்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (07) மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வரை சென்ற பழைய பகையின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த சுரேந்திரன் வெனிஸ்ரன் (19-வயது), வெனிஸ்ரனின் தந்தை வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.