ஜேர்மனில் இருந்து வந்த பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!
ஜேர்மன் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வந்த கூரிய பார்சல் ஒன்றை பொலிசார் திறந்து பார்த்து ஆய்வு செய்த போது, அதில் இருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜேர்மனி நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த கூரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.
அப்படி வந்த பார்சல்களில் ஒரு பார்சல் ஜேர்மனி உள்ள பிராங்க்பர்ட் நகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு வந்திருந்தது.
அந்த பார்சலில் மருத்துவ பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் வலுத்ததால், அந்த பார்சலை திறந்து பார்க்க முடிவு செய்து அதனை திறந்து பார்த்த போது, அதில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களில் 100 மாத்திரைகள் இருந்தன.
அந்த மாத்திரைகளை ஆய்வு செய்து பார்த்த போது, அனைத்துமே மெத்தொகட்டமின் என்ற போதை மாத்திரைகள் என தெரியவந்தது.
குறித்த மாத்திரைகளின் மதிப்பு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ததுடன் போதை மாத்திரைகள் பார்சலில் உள்ள முகவரியான ஈரோடு சென்றனர்.
ஆனால், அந்த முகவரியில் தாய் மட்டுமே இருந்த நிலையில் பார்சல் உரிய அவரின் மகன் , பெங்களூருவில் உள்ள பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் பணியில் இருப்பதாக அவர் கூறினார்.
இதையடுத்து, சுங்கத்துறையினர் பெங்களூரு சென்று அலுவலகத்தில் பணியிலிருந்த குறித்த நபரை கைது செய்தனர்.
அதன் பின்னர் கைதானநபரை , சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த நபர் போதை மாத்திரைகளை பார்சலில் வரவழைத்ததை ஒப்புக்கொண்டார்.
இதேவேளை குறித்த நபர் மலேசிய குடியுரிமை பெற்றதும், அந்த தனியார் நிறுவனத்தில் பொருட்களின் தரக்கட்டுப்பாடு ஆய்வாளராக பணியாற்றுவதும் தெரியவந்தது.
இந்த நிலையில் குறித்த நபர் இந்த போதை மாத்திரைகளை தனக்காக வாங்கினாரா அல்லது வேறு யாருக்காவது விற்பனை செய்ய வாங்கினாரா என்றும், மலேசியாவிற்கு கடத்தும் திட்டம் வைத்திருந்தாரா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo