பிளாயிட் கொலை - பொலீஸ் அதிகாரிக்கு ரூ.7.5 கோடியில் ஜாமீன்!!
அமெரிக்காவை அதிரவைத்த ஜார்ஜ் பிளாயிட் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு ரூ.7.5 கோடியில் நிபந்தனை ஜாமீன் வழங்கபட்டு உள்ளது.
கடந்த 25-ந் திகதி அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கருப்பு இனத்தவர்,போலீசாரால் கொல்லபப்ட்டமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் முக்கிய குற்றவாளி டெரெக் சவ்வின் மற்றும் தொடர்புடைய 3 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 பேரும் கைது செய்யபட்டு உள்ளூர் சிறையில் அடைக்கபட்டு இருந்த நிலையில் சிறைசாலையில் இருக்கும் சவ்வின்வர் ஜாமீனில் வெளியே வர முயற்சித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஹென்னெபின் கவுண்டி மாவட்ட நீதிமன்றம் அவரது ஜாமீனை நிபந்தனைகளுடன் 1 மில்லியனாகவும் நிபந்தனைகள் இல்லாமல் 1.25 மில்லியனாகவும் நிர்ணயித்து உள்ளது.
நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவர் தனது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் , சட்ட அமலாக்கத்தில் அல்லது எந்தவொரு பகுதியிலும் பாதுகாப்பில் ஈடுபடக்கூடாது, மாநிலத்தை விட்டு வெளியேற கூடாது, குடும்பத்துடன் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற நிபந்தனைகளுக்கு ஒப்புகொண்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் வழக்கின் வலுவான மக்கள் எதிர்வினை ஆகிய இரண்டின் காரணமாக அரசு வழக்கறிஞர் பொலிஸ் அதிகாரிக்கு அதிக ஜாமீன் கேட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை மீண்டும் ஜூன் 29 தேதியை நடைபெறும் கடந்த 25-ந் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




