கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்றுமுதல் புதிய நடைமுறை!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் அனைவருக்கும் விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் விமான நிலையத்தில் பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில், பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.