கருணாவைக் கவர்ந்து இரகசியங்களைக் கறந்தவர்!!

கருணாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக,விடுதலைப்புலிகளின் சகலவிதமான பலம் பலவீனங்களை தன்னைக் கொடுத்து,துல்லியமாக பெற்றுக்கொண்ட இராணுவப்புலனாய்வு பிரிவினரால் கையாளப்பட்ட சாந்தி பெர்னன்டோ தான் இவர்.

ஆரம்பத்தில் கருணா துரோகம் இழைத்துவிட்டு பின் புலிகளின் நடவடிக்கைகள் ஆரம்பமானவுடன்,அலிசாகிர் ஊடக ரணிலை தொடர்பு கொண்டபோதும் ரணில் அரசு பெரியளவில் கருணா மீது ஆர்வம் காட்டவில்லை. இதற்கான காரணம் எரிக் சொல்கைம் தலைமையிலான மத்தியஸ்தர்களாவர்.
அதன் பின் ஆரம்பத்தில் இராணுவ ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தவையே அலிசாகிர் தொடர்பகொண்டு தனது வாகனத்திலே கொழும்புக்கு அழைத்து சென்று விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டு,பின்னர் டக்ளசும் அலிசாகிரும் தமது இராணுவத் தொடர்புகளூடாக நேரடியாக இராணுவ புலனாய்வு பிரிவான எம்.ஐ.சி உடன் தொடர்பு படுத்திவிட்டார்கள்.
டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியான கெந்தவிதாரணவுடன் தொடர்பிலிருந்த அதேவேளை,அலிசாகிர் இராணுவ புலனாய்வு அதிகாரிகளாக இருந்த ஏ.எஸ்.சகீர் மற்றும் நிசாம் முத்தாலிப்புடனும் பொலிஸ் புலனாய்வாளர்களான நிலாப்தீன்(கொழும்பு) அன்வர்டீன்(கொழும்பு) ரபய்தீன்(மத்திய மாகாணம்) பைதுல்லா(திருமலை) உட்பட பலரின் தொடர்புகளில் இருந்தவராவர்.
இவை இப்படி இருக்கையில் சந்திரிகா-ரணில் அரசியல் மோதல்கள் இடம்பெற மகிந்த ராஐபக்ச பிரதமராக வந்து கோத்தபாயவும் வருகை தந்த பின்னர் கருணாவிற்கு இராஐ மரியாதையும் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றவென சாந்தி கருணாவுடன் இணைக்கப்பட்டார்.
இதுவே கருணா எடும் எட்டப்பனின் கதைகளின் சாரம்சம் ஆகும்.
இதனைவிட மிக கேவலமான களியாட்டங்களை தேனகம் எனும் தளத்தில் நடத்திய கருணா, எல்லாவகையான துரோகங்களையும் செய்து அங்கிருந்து தப்பி சென்ற பின் இவனுடன் கூட சென்று அங்கு இவனின் செயல்களால் விரக்தி அடைந்து தமக்கு புலிகளால் மரணதண்டணை கிடைத்தாலும் பிரச்சனை கிடையாது என திரும்பி வந்த மகளீர் போரளிகள் தமக்கு நடந்தவற்றை எடுத்து சொன்ன போதே அனைத்தும் தலைமைக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் கருணாவின் தேசத் துரோகமும் பாலியல் கூத்துக்களும் என்றுமே தமிழின வரலாற்றில் மன்னிக்கப்படமாட்டாது என ஆர்வலர்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
அரசன் அன்று கொல்வான்...தெய்வம் நின்று கொல்லும்!

Blogger இயக்குவது.