நான்கு கடற்படையினருக்கு கொரோனா!

வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நான்கு கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து கடந்த 22 ஆம் திகதி அந்த முகாமைச் சேர்ந்த 276 கடற்படை வீரர்கள் வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனை அடுத்து இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது 4 கடற்படை வீரர்களுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் மூவருக்கு நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொழும்பு ஐடிஎச் மருத்துவ மனைக்கும், மேலும் ஒருவருக்கு இன்று காலை கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.