கணவன் கொரோனாவால் இறந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் உடலை அடக்கம் செய்த நிலையில், அதன் பின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். ரயில்வேயில் வேலை பார்த்து வரும் இவருக்கு, ராமபிரபாவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தி கணவர் பிரபகர்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேர்மறை முடிவு வந்ததால், அவர் உடனடியாக மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
3 நாட்கள் தீவிரமான சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது சடலத்தை சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு வந்து, நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது.
பிரபாகருக்கு ஏற்கனவே தொற்று இருந்ததால், 2 மகள்களுக்கும் பரிசோதனை செய்ய உடனே அரசு மருத்துவமனைக்கு, புறப்பட்டு சென்றனர். தன் அம்மாவையும் தங்களுடன் பரிசோதனை செய்ய வருமாறு அழைத்துள்ளனர்.
ஆனால், ராமபிரபாவதி மறுத்துவிடவே, அடக்கம் செய்துவிட்டு வந்ததில் இருந்து கணவரை நினைத்து அழுது கொண்டே இருந்துள்ளார்.
இதனால் அவரை சமாதானப்படுத்த முடியாமல், மகள்கள் இருவரும் அழுதுகொண்டே மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமபிரபாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.