கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749!
நாட்டில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி அதில் 19 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 14 பேர் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியவர் என்றும் மேலும் 02 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 31 பேர் கடற்படையினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அந்தவகையில் தற்போது 902 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் 836 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




