வடமேற்கு லண்டனில் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு!!

வடமேற்கு லண்டனில் உள்ள பூங்காவில் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பெருநகர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்குப் பிறகு, ப்ரெண்டில் உள்ள பிரையன்ட் கன்ட்ரி பூங்காவில் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு பெண்களும் சம்பவ இடத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். எனினும், குறித்த பெண்களின் வயது, இது கொலையா, தற்கொலையா உள்ளிட்ட எவ்வித தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘குறித்த பெண்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிரேத பரிசோதனை சரியான நேரத்தில் நடைபெறும்’ என கூறினர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.