சங்காவின் இடத்திற்கு கிளேர் கோனர்


மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் அடுத்த தலைவராக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி கிளேர் கோனரின் பெயரிடப்பட்டுள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார சங்கக்காரவின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், கிளேர் கோனர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார். மேலும், மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் 233 ஆண்டுகால வரலாற்றில், முதலாவது பெண் தலைவராக கிளேர் கோனர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.